கம கம சளி கஷாயம்!நாa மண்டல நோய் என்று சொல்லும்போது அது உடல் பலஹீனத்தை உண்டாக்கி உடலை  சோர்வடைய வைத்துவிடும். குறிப்பாக பத்து வயதில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததற்கும், அவரே ஒரு 70  வயதில் ஆஸ்துமாவோடு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. வயதாக வயதாக அவருக்கு ஆஸ்துமாவினால், நிமோனியா  காய்ச்சல்  வரைக்கும் வந்து அவர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்.
இதனால் அவரது உடல் மிகுந்த சோர்வடைந்து இருக்கும். இப்படியாக நுரையீரல் மண்டல நோய்கள் தீவிரமடைந்து நம்மை பாதிக்காமல் இருக்கவும், அதே சமயம் அந்த நோயிலிருந்து நம்மை பாதுகாக்கவும்  உண்டான சளி கஷாயம் பற்றி பார்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல்  வயதானவர்கள் வரை இந்த கஷாயத்தை சாப்பிடலாம்.

கமகமக்கும் சளி கஷாயம்...
முசுமுசுக்கை வேர்,  ஆடாதோடை இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகம், கிராம்பு மற்றும் பச்சை வெற்றிலை போன்ற மூலிகைகளை கொண்டது அந்த கஷாயம். ஆஸ்துமா நோயை குணப்படுத்தக்கூடிய   மூலிகையான முசுமுசுக்கை வேரின்  சூரணம், நுரையீரல் பலவீனத்தை மட்டும் அல்ல, சளி, இருமல் இருக்கும்போது வெளியேறும்  ரத்தப் போக்கையே கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது ஆடாதோடை சூரணம்.

கபத்தினால் உண்டாகும் நுரையீரல் பாதிப்புகளை நீக்கக்கூடிய சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுக சூரணம், நுரையீரலில் பச்சை, மஞ்சள் நிறத்தில் கட்டி கட்டியாக இருக்கும் சளியை  வெளியேற்றும் வல்லமை கொண்ட கிராம்பு சூரணம், கடைசியாக ஒன்று அல்லது இரண்டு வெற்றிலையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெற்றிலை நுரையீரலில் உலர்ந்து கிடக்கும் சளியைக் கூட ஈரமாக்கி  வெளியேற்றும் வல்லமை கொண்டது. இவை அனைத்தையும் இரண்டு கிராம் எடுத்து, 300 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து 100 மில்லியாக  சுண்டியவுடன் காலை மற்றும் இரவு என உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இப்படி சாப்பிட்டு வந்தால், உடலுடைய ஆரோக்கியத்தில் மிகப் பெரிய மாறுதலை உணர முடியும். நல்ல வாசனையுடன், காரமான தன்மையோடு உள்ள இந்த கஷாயத்தை, காசநோய் பிரச்னை உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் சாப்பிடலாம். விரைவில் குணமாகி விடும். இந்த சளி கஷாயம் நுரையீரல் மண்டலத்தில் ஏற்படும் அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்து, படிப்படியாக நோயினை குணமாக்கும்.

இப்போது எல்லாருடைய உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் எதிர்ப்பு சக்தி திறன் குறைந்து, நோய்க்  கிருமிகளுக்கு எதிர்ப்பு திறன் அதிகமாகி விட்டது. இதற்கு அருமருந்து, சளி கஷாயம். வேலைக்கு  போகும் பெரியவர்கள் முதல், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை என அனைவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இதற்குண்டு.

காச நோய்க்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்கள் பசியின்மை, சோர்வு, நோய் நீங்காமை போன்ற காரணத்தால், காச நோய்க்கு மருந்து சாப்பிடுவதைக் கூட நிறுத்தி விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் காசநோய்க்கு தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளோடு, இந்த கஷாயத்தையும் சேர்த்து சாப்பிடலாம். விரைவில் குணமாகும்.

காசநோய் வட இந்தியாவை விட தென் இந்தியா பகுதியில் அதிக பாதிப்பு தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சளி, இருமல் குறையவில்லை என்று இருப்பவர்கள் இந்த சளி கஷாயத்தை தொடர்ந்து  சாப்பிட்டு மிகுந்த பலன்களைக் காணலாம், அத்தோடு ஆரோக்கியம் மேம்படும். 

6 மாத காலம்... உடல் எடை மாற்றம்மூலிகை தேநீரை தொடர்ந்து  6 மாத காலம் பருகி வந்தால், உடல் எடையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமில்லாமல், ஆரோக்கியமும் மேம்படும். எந்த  நோய்க்கு எந்த மாத்திரை மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் உடன் இந்த கசாயம் சாப்பிடும் போது, எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாமல் நம் உடலில் பல மாற்றங்களை காண முடியும்.

மிளகு, திப்பிலி மூலக்கூறுகள்

2001ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய்க்கு சாப்பிடும் மருந்து மாத்திரைகளோடு, சப்ளிமெண்டாக மிளகு, திப்பிலியில் இருக்கும் மூலக்கூறுகளைக் கொடுத்து வந்தபோது, நோய் விரைவில் குணமடைந்ததாக அந்த ஆராய்ச்சி சொல்கிறது.

தொடர்ந்து மாத்திரை சாப்பிட தேவை இல்லை என்றும் அந்த ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் இவ்விதமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளிவரும்போது மிளகு, திப்பிலி மூலக்கூறுகள் அந்த மருந்தில் சேர்ந்து இருக்கவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட அற்புத குணங்கள் கொண்ட மூலிகை தேனீரை பருகி ஆரோக்கியம் பேணுங்கள்!

முன்கூட்டியே நோய் வராமல் தற்காத்து, நோய் வந்தால் தடுத்து, எந்த ஒரு பக்க விளைவுகளும் உண்டாகாமல்  தற்காப்பது தான் ஆயுர்வேத மருத்துவமாகும்.