ப்ரியங்களுடன்சக்தி தரிசனம் பகுதியில் ‘நல்வாழ்வருளும் நல்லிச்சேரி நந்தி மங்கை’யில் அன்னையின் அரிய தகவல்கள் படித்ததும் ஒரு முறையாவது ‘நல்லிச்சேரி’ போக வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
- வத்சலா சதாசிவன், சிட்லப்பாக்கம்.

வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் தீப்பெட்டி பற்றி விரிவாகவும் அதே சமயம் ெபண்ணுக்கு பெண்தான் இரக்கப்படுவாள் என்பதற்கு உதாரணமாக புரிந்துகொண்டு பெண்களுக்கு உதவும் பேச்சியம்மாளை எத்தனை பாராட்டினாலும் தகும்.
- ராஜி குருஸ்வாமி, ஆதம்பாக்கம்.

அன்பைப் பரிமாறும் உணவுப் பொட்டலம் தரும் கௌசல்யா தான் இந்த இதழில் என் மனதைக் கவர்ந்தவர். மேலும் பலருக்கு பல
உதவிகள் இவர் தொடர்ந்து செய்ய வாழ்த்துகள்.
- லதா, கன்னியாகுமரி.

செல்லுலாய்ட் பெண்கள் தலைப்பில் புஷ்பலதா பற்றிய செய்திகளை படிக்கும் போது அவர் நடித்த ஒவ்வொரு படங்களும் நினைவுக்கு வந்து சென்றன. அடுத்த இதழில் யார் என்ற ஆவலை தூண்டுகிறது.
- சாந்தி, துவாக்குடி.

சமையல் கலைஞர் சசி மதனின் 30 வகை கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள் சூப்பர். ஒவ்வொன்றையும் தயாரித்து பார்க்க வேண்டும் என்று எண்ணம் ஏற்படுகிறது.
- ஜீவிதா, திருப்போரூர்.

வேலையை அள்ளித் தரும் ஆப்கள்... ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக இருந்தது. இனி திறமையானவர்கள் வேலை கிடைக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஆப்களில் பதிவு செய்து தங்களின் திறமைக்கு ஏற்ப வேலையை தேடிக் கொள்ள முடியும் என்று வழிகாட்டிய தோழிக்கு கோடான கோடி நன்றி.
- சிவகுமார், கோவை.

வெற்றிக் கோப்பையை அடைவதற்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை தன் விளையாட்டு திறமையால் உணர்த்தியுள்ளார் செஸ் ராணி ஜெனித்தோ ஆண்டோ.
- லலிதாகுமாரி, மதுரை.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போனாலும், தோழி சாய்சில் வெளியான நகைகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
- ஜான்சி, மணப்பாறை.

மும்பை என்றால் நினைவுக்கு வருவது அந்த அழுக்கு படிந்த தாராவி தான். அந்த இடத்தை தன் கரங்களால் வண்ணமயமாக்கி இருக்கும் ரபுல் நாகிக்கு சல்யூட்.
- கிருஷ்ணவேணி, கம்பம்.