ப்ரியங்களுடன்...வாழ்வென்பது பெருங்கனவு தொடர் அயரா முயற்சியால் அரும்பணி ஆற்றி வெற்றிப் பாதையில் பயணிக்கும் காயத்ரி அவர்களின்  உத்வேக முயற்சி வரிகள் செம்மை மிக்கது.
- கவிதா சரவணன், திருச்சி.

30-க்கும் அதிகமான பாரம்பரிய செட்டிநாடு உணவுகள் குறித்த சமையற்குறிப்புகள் அடங்கிய இலவச இணைப்பு செட்டிநாட்டு உணவுப் பிரியர்களை தெவிட்ட வைத்துவிட்டது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இதுவரை வந்த செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் எம்.என்.ராஜம் தனித்து நிற்கிறார். சின்ன துரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல் பழைய பேருந்தும் எதற்கும் மாறி உதவும் என்பது முற்றிலும் உண்மை.
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

பிணங்களின் தோழி என்ற கட்டுரையிலிருந்து... உறவுகள் எல்லை தொலைவில் சென்றுவிட்ட நிலையில் தான் மட்டும் தனித்துவிடப்பட்ட அனாதைபோல் நிற்கிறேன் என்ற நினைப்பு இவரை (நீலா) அனாதை பிணங்களின் தோழியாக்கி விட்டது என்பதை படித்து அழுதே போனேன்.
- என்.கிருஷ்ணவேணி, திருவண்ணாமலை.

‘சக்தி தரிசனம்’ மூலம் அன்னை மாங்காடு காமாட்சி அம்மன், அடர்ந்த மாமரங்கள் சூழ்ந்த காட்டுக்குள் மெல்லிய பூவாய் வந்திறங்கிய
பின்னணி அறிய முடிந்தது.
- கி.பார்வதி, கிழக்குத் தாம்பரம், சென்னை.

ஆண்களுக்கு இணையாக சில கலைகளில் பெண்கள் முத்திரை பதித்து வருகிற பட்சத்தில் சிலம்பம் எனும் வீர விளையாட்டில் அசாத்திய சாதனை புரிந்து வரும் பொன்னேரி வீராங்கனை வெண்மதி வெகு வியப்பில் ஆழ்த்தி விட்டாள். வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்! ஜலந்தரில் போஸியா விளையாடப்போன மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை விவரித்த கட்டுரை மனதை நெகிழ, மகிழ வைத்து விட்டது.
- அயன்புரம் டி.சத்திய நாராயணன், பட்டாபிராம், சென்னை.

மல்யுத்த வீராங்கனை ‘குர்சரண்ப்ரீத் கவுர்’ கட்டுரை வாசித்து மனம் நெகிழ்ந்தேன். எத்தனைப் பிரச்னைகள்? ஆனாலும் அவற்றில் அமிழ்ந்து விடாமல், போராடி வெற்றி பெற்று வந்துள்ளது பாராட்டுக்குரியது.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

மனசை ரிலாக்ஸ் ஆக்கும், ரிலாக்ஸ் லைட், கார்டியா, காரிடியாக் கோஹெரன்ஸ், செரினிட்டி போன்ற நான்கு வகை ஆப்கள் குறித்த தகவல்கள் எக்சலன்ட்.
- வி.மோனிஷா பிரியங்கா, தில்லை நகர், திருச்சி.

கிச்சன் டைரீஸ் அழகு மேனியின் எழிலை நலத்தோடு பலமாய் பேணிக்காக்க பெரிதும் பயனளிக்கிறது.
- கவிதா, ஸ்ரீரங்கம்.