பக்ஹா



அரபு மண்ணில் குளிர்காலத்தில் கிடைப்பது ‘பக்ஹா’. பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு போல் இருக்கும். டிசம்பர்-ஜனவரி மாதங்களில் பாலை வனத்தில்  மண்ணுக்கு அடியில் விளைந்து கிடக்கும் மழைத்துளி சிப்பிக்குள் விழுந்து கடலில் முத்து விளைவதுபோல், ஒரு  துளி மழைத்துளியில் விளைவது  என்கிறார்கள். இந்தக் கிழங்கில் புரதச்சத்து அதிகமாம். அதோடு கண்களுக்கு மிகவும் சிறந்ததாம்.

ஒரு கிலோ 1500 ரூபாய் முதல் 5,500 ரூபாய்  வரை  விற்கிறார்கள். வெள்ளை, சாம்பல், தங்க நிறம் என ரகம் பிரித்து விற்பனை செய்வார்கள். சீசனில் அரேபியர்கள் 10 கிலோ முதல் 60 கிலோ வரை வாங்கி இருப்பு  வைப்பார்கள். உள்ளே மண் துகள்கள் அதிகமாக இருக்கும். சுத்தமாக கழுவி நைலான் பேக்கில் போட்டு ஃப்ரீசரில் வைத்துவிடுவார்கள்.  தேவைப்படும்போது எடுத்து இதனுடன் இறால் சேர்த்து எண்ணெயில் வதக்கி, வெங்காயம், பூண்டு மசாலா போட்டு சமைப்பார்கள். இது மிகவும்  சுவையாக இருக்குமாம்.

- வத்சலா சதாசிவன், சிட்லப்பாக்கம், சென்னை-64.