இன்டர்நெட் டிரெண்டிங்



* மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், சந்தோஷ் நாராயணன் இசையில் “அடி கருப்பி என் கருப்பி” பாடலும் தற்போது  டிரெண்ட் ஆனது.

* ரஜினிகாந்த் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மார்ச் 2ல் வெளியிட்டார். பா.ரஞ்சித், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் இது. மார்ச் 1 ஆம் தேதி காலா திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் டீசர் மார்ச் 2ல் வெளியிடப்பட்டது.

டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வையாளர்கள் டீசரை பார்த்திருக்கின்றனர்.  காலாவின் டீசர் வெளியாவதற்கு முன்பு அதனுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறியது. எது எப்படி இருந்தாலும் “காலா” பேசும் அரசியல் படம் வந்த பிறகே தெரியும். இது ரஜினிகாந்துக்கு 164-ஆவது திரைப்படமாகும். ரஜினி நடித்த திரைப்படங்களிலே குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற‌ டீசர் “காலா”.
 
* வெற்றி மாறன் தயாரிப்பில் தனுஷ், ஆண்ட்ரியா நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர் ‘வடசென்னை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி டிரெண்டிங்கில் பின்னுகிறது. தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

- ஜெ. சதீஷ்