ப்ரியங்களுடன்...



பெண்களின் சாதனைகளை பட்டியலிட்டு, பெண்ணின் பெருமையை உணர்த்தி, பல்வேறு தகவல்களால் அசத்தி விட்டீர்கள். பெண்கள் ஆண்களை விட திறமையாளர்கள் என்பதையும் நிரூபித்து விட்டீர்கள். இதழாசிரியருக்கு என் சார்பில் கோடான கோடி நன்றிகள்.
- இல.வள்ளிமயில், திருநகர்.

மிளகின் மகத்துவமிக்க அரும்பலன்கள் பலமான வளமைமிகு நலவாழ்வுக்கு வளம் கூட்டியது. புத்துணர்வை தரும் தேநீரை நமக்கு தரும் தொழிலாளர்களின் வாழ்வாதார அவலநிலை மனதை நெகிழ செய்தது.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

சவுகார் ஜானகியின் இளைய சகோதரி கிருஷ்ணகுமாரியைப் பற்றி அறிய நேர்ந்தது. அவரின் வளர்ப்பு மகள், கிருஷ்ணகுமாரியின் சுயசரிதம் எழுதியுள்ளது வியப்பு.
- சு.நவீனாதாமு, பொன்னேரி.

தெலுங்கு திரையில் அழகோவியம் கிருஷ்ணகுமாரியின் திரைப்பட வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய தோழிக்கு நன்றி. அட்டைப் படத்தில் ஓவியமாய் தீட்டப்பட்டிருந்த ஓவியாவின் புன்னகைப்படம் மனதில் ஒட்டிக் கொண்டது! ஏழாவது பிறந்த நாளை கொண்டாடும் ‘குங்குமம் தோழி’க்கு வாழ்த்துக்கள்!
- டி.முத்துவேல், கருப்பூர்.

நல்ல புரிதலோடு வாழ்க்கையை நடத்தி வரும் தேவதர்ஷினி-சேத்தன் தம்பதியினர் அளித்த பேட்டியில் ஆரோக்கியம் அதிகமிருந்தது.
- என்.தேவதாஸ், பண்ணவயல்.

ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்தல் என்பது திருமண வாழ்விற்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுகோல்தான் லிவிங் டு கெதர் வாழ்விற்கும் முக்கியம் என்பதையும், குரல் கொடுத்த சகோதரிகள் அனைவரும் அழகாகச் சொல்லியிருந்தார்கள். தேயிலை தோட்டப் பெண்களின் கதைகளை படித்த போது மனம் கனத்தது. ‘டீ’ ஒரு உற்சாகத் திரவம் என்பார்கள். நமக்கு உற்சாகத்தைக் கொடுக்க எங்கோ ஒரு மூலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தத் தேயிலைப் பெண்களுக்கு நன்றி சொல்ல ஆறுதல் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
- சி.விஜயலெட்சுமி, குண்டூர்.

4 வயதில் நடிக்க வந்து 16 வயதினில் புகழடைந்து 54 வயதில் மறைந்து போன திரைவானின் மதிப்புமிக்க நட்சத்திரம் ஸ்ரீதேவிக்கு ‘கண்ணே கலைமானே’ எனும் தலைப்பில் செலுத்திய அஞ்சலி கண்களைப் பனிக்க செய்து விட்டது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், பட்டாபிராம்.