றெக்கை கட்டிக்கொள்வார்கள் உங்கள் குழந்தைகள்



வாசிப்பு மனதை பண்படுத்தும். சிறு வயதில் இருந்து துவங்கும் ஒரு பழக்கம் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். உண்மையில் தமிழில் சிறுவர்களுக்கான இலக்கியம் குறைவு என்ற எண்ணத்தைத் தீர்க்கும் வகையில் தற்போது சிறுவர் இலக்கியங்கள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. அத்துடன் சிறுவர் இதழ்களும் வரத் துவங்கி இருக்கின்றன. சென்ற ஆண்டு ‘தும்பி'. அடுத்து இந்த ஆண்டு ‘றெக்கை’ எனும் இதழ் வெளியாகி இருக்கிறது. சிறுகதை, விளையாட்டு, ஓவியப் பயிற்சி, கைவினைப் பயிற்சி, குழந்தைகளின் படைப்புகள், சிறுவர் நூல் அறிமுகம், சிறுவர், சிறுமியரின் சாதனை குறித்த செய்திகள், படக்கதை, பிறந்தநாள் காலண்டர், சினிமா, சூழலியல் என குழந்தை களுக்குத் தேவையான அனைத்துத் தரப்பு விஷயங்களையும் அளிக் கின்றது றெக்கை இதழ். ஆசிரியர் சரா சுப்ரமணியம். கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதழ் வெளியாகி உள்ளது. வடிவாக்கமே குழந்தைகளின் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இருக்கிறது. இப்புத்தகத்தைப் படிக்க படிக்க குழந்தைகளுக்கு கற்பனை சிறகு முளைத்து விடும் என்பதாலோ  என்னவோ இந்த இதழுக்கு ‘றெக்கை' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போல.


- ஸ்ரீதேவி மோகன்