இந்திய போர்விமானத்தின் முதல் பெண் விமானிஇந்தியாவில் முதல் முறையாக விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் விமானிகளாக மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவனி சதுர்தேவி, பாவனா காந்த், மோகனா சிங் மூவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. பயிற்சி முடிந்த நிலையில் இந்திய விமானப்படையில் அதிநவீன மிக்-21 எனும் ஜெட் போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்கிற பெருமையை பெற்றுள்ளார் அவனி சதுர்தேவி. “மற்ற விமானங்களை இயக்குவது போல் இல்லாமல் இது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் இதை இயக்குவது கடினம் என்றார்கள். ஆனால் வெற்றிகரமாகப் பறந்தது மகிழ்ச்சி” என்கிறார். இந்திய விமானப்படையில் இவர்களை தொடர்ந்து அடுத்த பெண் விமானிகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- ஜெ.சதீஷ்