டவுட் கார்னர்?சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும்போது வெளிநாட்டுப் பணிக்குச் செல்ல முடியுமா? விசா வழங்குவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா?
- எஸ்.தீபிகா, திருச்சி.

பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமி...
‘‘சிபில் ஸ்கோர் என்பது நாம் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை  திருப்பி செலுத்துவதை அடிப்படையாகக்
கொண்டு கணக்கிடப்படும் புள்ளி ஆகும். அதனை வைத்துதான் மேற்கொண்டு நமக்கு கடன் வழங்குவதை வங்கிகள் தீர்மானிக்கும். சிபில் ஸ்கோர் அதிகம் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். குறைவாக இருப்பவர்களுக்குக் கடன் கிடைப்பது சற்று சிரமமான காரியம்தான்.

அதிக வட்டியில் சில தனியார் வங்கிகள் அவர்களுக்குக் கடன் வழங்கலாம். வெளிநாட்டில் வேலை கிடைத்துச் செல்வதற்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை. விசா வழங்குவதற்கு முன் அந்நாட்டுத் தூதர் நீங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறீர்களா என்றுதான் ஆராய்வார். சிபில் ஸ்கோரை அடிப்படையாக வைத்து விசா வழங்க மாட்டார்கள். அதனால் அது குறித்தெல்லாம் பயப்படத் தேவையில்லை” என்கிறார் செல்லமுத்து குப்புசாமி.

(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில்  விடை கிடைக்கும்.)

- கி.ச.திலீபன்