அறிவீர்களா? பெண்களின் சாதனைகள்



* ஆண் ரத்தத்திற்கும், பெண் ரத்தத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. உடலில் ஆண் ரத்தத்தைவிட பெண் ரத்தம் வேகமாக ஓடும் சக்தி உடையது.

* பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து.

* பெண் கவிஞர்கள் உலகிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் சங்க இலக்கிய காலத்தில் தமிழ் கவிஞர்கள் ஏராளமானோர் வாழ்ந்துள்ளனர்.

* ஆண்களிடம் இல்லாத சில சிறப்புகள் பெண்களுக்கு பிறவியிலேயே உண்டு என்று ஜெர்மன் நாட்டுப்பெண் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூளை வளர்ச்சியில் பிறவியிலிருந்தே பெண்கள் முன்னோடியாக விளங்குகிறார்கள். கேட்கும் சக்தி, நுகரும் சக்தி, தொடும் சக்திகள் ஆகியவற்றை மிக வேகமாக ஆண்களைவிடப் பெண்கள் பெற்றுவிடுகிறார்கள்.

* உலகிலேயே பெண்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இஸ்ரேல்.

* ஒரு பெண்ணின் வயதைக் கண்டுபிடிக்க அவள் காதில் அணிந்திருக்கும் வளையங்களை எண்ணினால் போதும். எங்கே? ஆப்பிரிக்காவில்! அங்கு ஒவ்வொரு வருடமும் பூர்த்தியாகும்போது பெண்களுக்கு இரு வளையங்களை இரு காதுகளிலும் அணிவித்து விடுகின்றார்கள்.

* உலக வரலாற்றிலேயே முதன் முதலாக நாடாண்ட பெண்மணி ஹாஷெப்லீட் என்பவர்தான். இவரது காலம் கி.மு.1501. எகிப்து தேசத்தைச் சார்ந்தவர்.

* முதன் முதலாக 1983ல் கேதரின் பாலஸீ என்ற ஜெர்மானியப் பெண் ஆகாய விமானத்திலிருந்து பாராசூட்டின் வழியாக குதித்தாள்.

* மோனோலிசாவின் படம்  உலகப் புகழ் பெற்றது. 1452ல் இத்தாலியில் பிறந்தவர் மோனோலிசா. சிறந்த ஓவியர், இசைக் கலைஞர், தேர்ந்த சிற்பி, கணித மேதை, பொறியியல் வல்லுனர், தாவர இயல் நிபுணர், உடற்கூறு ஆய்வாளர். இப்படியான பல்துறை ஒளியான மோனோலிசாவின் படம் உலகில் எல்லா நாடுகளிலும் இடம் பெற்றுள்ளது. இவர் படத்தை வரைந்தவர் லியானார்போ டாவின்சி.

* வாயல்மக் என்ற அமெரிக்க நாவல் ஆசிரியை 1938ம் வருடம் நோபல் பரிசு பெற்றார். இவர்தான் பெண்களில் நோபல் பரிசு பெற்ற முதல்வர்.

* எலன்சர்ச் என்ற பெண்மணியே முதல் விமானப் பணிப்பெண். வருடம் 1930.

* உலகின் முதல் பெண் பிரதமர் பண்டார நாயகா. 1959ல் இலங்கையின் பிரதமரானார்.

* விண்வெளியில் முதன்முதலில் பறந்தவர் சோவியத் ருஷ்யாவின் வீராங்கனை வாலண்டினா தெரஷ்கோவா.

* முதலில் அஞ்சல்துறை வரிசையில் இடம் பெற்ற முதலாவது பெண்மணி விக்டோரியா மகாராணி ஆவார். 1882 முதல் 1899 வரை இவரது தபால்தலைகள் உபயோகத்தில் இருந்தது.


* லட்சத்தீவின் ஒரு பகுதியான மினிக்காய் தீவில் திருமணத்திற்குப் பின் மனைவியின் குடும்பப் பெயரையே கணவன் வைத்துக்கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்பு முழுவதும் பெண்கள் வசமே. கிராம நிர்வாகத்திலும் பெண்கள் பங்குதான் அதிகம். சொத்துரிமையும் பெண்களுக்குத்தான். மார்க்கோபோலோ காலத்திலிருந்து மினிக்காய் மங்கையர் தீவு என்று அழைக்கப்படுவது பொருத்தம்தானே!

- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி.