ட்விட்டர் ஸ்பெஷல்



இனிமே பொடவைக்கடை பக்கமே போகக்கூடாது!

shaanthi @shaan_64

* வாக்கிங் போகும் போது எதிர்ல நம்மவிட வெய்ட் பார்ட்டி வந்தா, மனசுல ஒரு மெதப்பு! ஏதோ நம்மளும் அந்த வெய்ட் இருந்து நடந்து நடந்து இப்படி கொறைஞ்ச மாதிரி!
* பிரசவ/மயான வைராக்கியம் மாதிரி நிலையற்றது இந்த பீரோ க்ளீன் பண்ணும்போது வர்ற ‘இனிமே பொடவைக்கடை பக்கமே போகக்கூடாது’ங்கற வைராக்கியம்#self thoo
* சீக்கிரமோ/லேட்டோ உங்க இஷ்டத்துக்கு ப்ளான் பண்ணி கொழந்த பெத்துக்குங்க. ஆனா, முதல் முறை கரு உண்டாயிட்டா தயவு செஞ்சு அதக் கலைக்காதீங்க. சில பேருக்கு அப்புறம் கரு உண்டாகுறதில்ல. ஒரு தம்பதி வெளிநாட்டுக்கு ஹனிமூன் போணும்னு கலச்சிட்டு, இப்ப 15 வருஷமா காத்துட்டு இருக்காங்க :(
* அரவிந்த்சாமி அழகுங்கறத விட அவரை யாராவது அழகுன்னு சொல்லும் போது அவர் குடுக்குற embarrassed smile இன்னும் அழகு!



* வெங்கடேஷ் பட் மாதிரி சமைக்குறோமோ இல்லையோ, அவர் யூஸ் பண்ற ‘நட்ஸ் கட்டர்’, ‘மிளகுப்பொடிமேக்கர்’, அந்த கட்டிங் போர்டு எல்லாம் மொதல்ல வாங்கணும்!
* ஹேர்கட் பண்ணி விட்டுட்டு இருக்குற சலூன்காரர்கிட்ட அரசியல் பேசிட்டு இருக்கார் எங்கப்பா. ரொம்ப முக்கியம்ம்ம்!! அவர் கைல கத்திப்பா!
* கட்டிளங்காளைகள் காளையைக்கூட தைரியமா அடக்கிடுவாங்க போல. ஆனா, டென்டிஸ்ட் சேர் பாத்தாலே பம்ம ஆரம்பிச்சுடுறாங்க!
* சொந்த ஊர்ல நாம சொந்தம் கொண்டாடி சுத்துன தெருவுக்கு ஆசையா போய் அங்க தெரிஞ்ச மொகம் ஒண்ணு கூட இல்லாதப்ப வர்ற ஃபீலிங்க என்னன்னு சொல்லுறதோ?
* சொந்தக்கார பெரியவர் எலந்தப்பழம் வாங்க எங்க வீட்டு புண்ணியவானை காலேல 5 மணிக்கு வரச்சொல்றார்! இவங்க அத வாங்கப்போறாங்களா திருடப்போறாங்களா???!!!
* திடீர்னு யாராவது அப்பாவைப் பத்தி பெருமையா சொல்லக் கேட்டா, அன்னிக்கு முழுக்க ஒரே சந்தோஷம்... ஒரே பெருமை.

சச்சினையும் ரகுமானையும் பாத்தாலே ஒரு சந்தோஷம்... நம்ம சின்ன வயசுலருந்து பாத்த பசங்க நல்லா சாதிச்சுட்டா வர்ற சந்தோஷம்/ பெருமிதம்:)