அறிவோம் ஆயிரம்



உலகின் டாப் 10 பிசினஸ் தலைவிகள்

பெண் என்றாலே சக்திதானே? ஆண்கள் அதிக அளவில் பங்களிக்கும் வியாபார உலகில் அதிக சக்திவாய்ந்த பெண்களாகத் திகழும் மங்கையர் வரிசை இதோ...

1. Ginni Rometty

தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் இருக்கும் ஜின்னி ரொமெடி, கம்ப்யூட்டர் டெக்னாலஜி துறையில் முக்கிய நிறுவனமான ஐ.பி.எம். சேர்மன் மற்றும் சி.இ.ஓ. தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதிலேயே இவரது திறமையை அறிந்து கொள்ளலாம்!

2. Mary Barra

ஆட்டோமொபைல் துறையில் அசைக்க முடியாத நிறுவனமான ஜெனரல் மோட்டாரின் சி.இ.ஓ. 52 வயதான மேரி பாரா, ஜி.எம். நிறுவனத்தின் சோதனைக் காலத்தில் தலைமையேற்றவர். அவரின் துணிச்சலான முடிவுகள் வியாபார உலகில் புகழ் பெற்றவை. 18 வயது முதல் இந்நிறுவனத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து  இந்தப் பதவியை எட்டியிருக்கிறார்.

3. Indra Nooyi

முதல் 10 இடங்களில் நம்ம ஊரு பெண்ணும் இருக்கிறார் என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. இந்திரா நூயிக்கு வயது 58. அமெரிக்காவில் அதிக வருமானம் பெறும் சி.இ.ஓ.க்களில் ஒருவர். பெப்சி - கோ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பெப்சியின் இரும்புப் பெண்மணி என்று வர்ணிக்கப்படுபவர்.

4.Marillyn Hewson

பெண்கள் பங்கெடுக்காத துறைகளே இல்லை என்பதற்கு மெர்லின் ஹியுசன் மற்றுமொரு உதாரணம். ஏரோஸ்பேஸ் மற்றும் டிஃபென்ஸ் கான்ட்ராக்டர். இந்தத் துறையின் முடிசூடா ராணி. 60 வயதான இவர் ‘லாக்ஹீட் மார்ட்டின்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ.

5. Ellen Kullman

டுபண்ட் என்னும் கெமிக்கல், பயோ அறிவியல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருக்கிறார், 58 வயதான எல்லன் குல்மென். தனது பதவி காலத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பை பன்மடங்கு உயர்த்திய பெருமைக்கு உரியவர்.

6.Meg Whitman

டெக்னாலஜி துறையில் முக்கிய நிறுவனமான ஹெச்.பி.யின் சேர்மன், சி.இ.ஓ. மற்றும் பிரசிடென்ட், 58 வயதான மெக் விட்மென். பி அண்ட் ஜி, வால்ட் டிஸ்னி, இபே போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பணியாற்றி ஹெச்.பி.க்கு வந்திருப்பவர். 58 வயதான மெக், உலகின் சிறந்த வியாபார வல்லுனர்களில் ஒருவரும் கூட.

7. Irene Rosenfeld

சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருப்பவர் ஐரின் ரோசன்ஃபெல்ட். உலகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட ‘மாடலீஜ் இன்டர்நேஷனல்’ உணவு நிறுவனத்தின் உயரிய தலைவர். 61 வயதான இவர் அடுத்த 4 ஆண்டுகளில் நிறுவனத்தின் மிகப்பெரிய மாறுதலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

8.Pat Woertz

61 வயதான பேட்வோர்ட்ஸ் கிஞிவி என்ற உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கமாடிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் சேர்மனும் கூட. 2006 முதல் இந்நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.

9. Abigail Johnson

அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ‘ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ தலைவர் பதவியை அலங்கரிக்கும் அபிகெய்ல், 52 வயது ஆனவர். 2012 முதல் இப்பதவியில் இருக்கிறார். உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகள் பட்டியலிலும் இவர் இடம் பெறுகிறார்.

10.Sheryl Sandberg

உலகம் முழுதும் பல கோடி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் முதுகெலும்பு இவரே. சி.ஓ.ஓ. பதவியில் இருக்கும் 45 வயதான ஷெரில், 2013ல் அவர் எழுதிய புத்தகத்தின் மூலம் (Lean In) மேலும் புகழடைந்தவர். இவரது புத்தகமும் ஹாட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. டெக்னாலஜி துறையில் இருக்கும் அதிக வருமானம் பெரும் சிலரில் ஒருவர் இவர்.