ஹோம் கார்டன் வெற்றிக் கதை



வாழ்க்கையே மாறும்!

எழுபதுகளில் வீட்டைச் சுற்றித் தோட்டம் அமைத்திருப்போம். உலர்ந்த  இலைகளை, மீதமான உணவுகளை தென்னை மரத்தைச் சுற்றிக் கொட்டுவோம். மேஜிக்  போலவே அந்த வேஸ்ட் பொருட்கள் ஸ்வீட்டான இளநீராக மாறியதை  நினைத்து சந்தோஷப்பட்டோம். இப்போது குட்டி குட்டி ஃபிளாட்களில்  வசிக்கையில், தோட்டத்துக்கு எங்கே போவது? பொட்டலம் போல கட் டப்பட்ட சிட்டி பஸ்ஸில் நசுங்கிக்கொண்டு மேம்பாலத்தில் பயணம்  செய்யும் ஒரு பொழுதில் உதித்தது மொட்டைமாடி ஐடியா!

மாலா குமார சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூருவில் விஷ்வநாத் கடூர், ஆர்கானிக்  மொட்டை மாடித் தோட்டத்துக்கான பயிற்சி வகுப்பு நடத்தினார்.  ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருந்த எனக்கு அவரைப் பற்றி எழு தும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தோட்டம் அமைப்பதில் ஆர்வம்  அதிகரித்தாலும் தேவையான நேரம் கிடைக்கவில்லை.

4 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழியாக மொட்டை மாடித் தோட்டம்  அமைத்தேன். அந்த நேரம் பார்த்து எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.  கார் மோதியதில் இரு கால்களிலும் எலும்பு முறிவு. அதனால் மாடித்  தோட்டத்தை கவனிக்க முடியவில்லை. ஒருவழியாக, 2 ஆண்டுகளுக்குப்  பிறகுதான் என்னால் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு மாடிப்படி ஏற  முடிந்தது. ஆனால், இந்த ட்ராஃபிக்கில் தெருவை கடந்து ஷாப்பிங்  செய்வதென்பது முடியாமல் போனது. ஆன்லைன் மூலம் அட்டைப்  பெட்டிகளில் வந்திறங்கும் காய்களை வாங்குவதிலும் ஆர்வமில்லை.

அந்தச் சூழலில்தான் மீண்டும் மொட்டை மாடித்தோட்டத்தில் கவனம்  செலுத்த ஆரம்பித்தேன். ஆர்கானிக் மொட்டை மாடித் தோட்ட ஆர்வ லர்கள் உருவாக்கிய ஃபேஸ்புக் குரூப்பில் இணைந் ததும் வசதியாக இ ருந்தது. அவர்கள் தந்த டிப்ஸ்களின் உதவியோடு, நிறைய காய்கறிச்  செடிகளை வளர்க்க ஆரம்பித்தேன். நாம் தினமும் ஏராளமான பாலிதீன் கவர்களை தூக்கியெறிகிறோமே...  யோசித்தேன்... புது ஐடியா தோன்றியது. அந்த கவர்களில் எந்த அளவு கொள்ளளவு தாங்குமோ, அந்த அளவு சிறுசிறு கீரைகளை வளர்க்க  ஆரம்பித்தேன். நாமே வளர்ப்பதால் எந்த ஒரு பொருளையும் வீணாக்க  மனம் வராது, இல்லையா?

ஆண், பெண், எறும்பு, பூனை, பல்லி, புழு, தேனீ, வண்ணத்துப்பூச்சி மற் றும் கோடிக்கணக்கான உயிரினங்கள் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின் றன. வாசனை மிகுந்த ரசாயன ஊதுபத்திகளை பயன்படுத்தி வழிபாடு  செய்வதைக் காட்டிலும், மொட்டைத் தோட்டத்துக்கு காலையும் மாலை யும் கட்டாயம் செல்வதையே பெரிதும் விரும்பினேன். அதுவும் ஒருவ கையில் வழிபாடுதான். தியானம் நல்ல நேர்மறை எண்ணங்களை  கொடுக்கும். எனது தோட்டத்தை பராமரிக்கும்போது அத்தகைய மகிழ்  மனநிலையை பெறுகிறேன். வெறும் பழங்களை பெறுவது மட்டுமல்ல...  வாழ்க்கையின் எதிர்மறை எண்ணங்களிலும் மாற்றத்தைப் பெற முடிந்தது!

நன்றி: www.thealternative.in