பட்ஜெட் போன்கடந்த வாரம் சத்தமே இல்லாமல் ‘ஷியோமி’ நிறுவனம் ‘ரெட்மி 9’ என்ற புது மாடலை ஸ்பெயினில் அறிமுகம் செய்துள்ளது. ‘ரெட்மி கே30 சீரிஸி’ன் டிசைனைத் தழுவி புதுவிதமாக இந்த மாடலை டிசைன் செய்திருக்கின்றனர்.
பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எல்லா வகையிலும் அப்டேட் செய்யப்பட்ட இந்த போன் இந்தியாவில் கிடைக்க சில மாதங்கள் ஆகும். இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

எல்சிடி பேனலுடன் 6.5 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி மெகா டிஸ்பிளே, 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வகையில் இந்த போன் கிடைக்கிறது. 5020 mAh பேட்டரி திறன், 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங். முக்கியமாக கேமராதிறனில் நல்ல மாற்றங் களைச் செய்திருக்கிறார்கள்.

13 எம்பியில் முதன்மையான கேமரா, 8 எம்பியில் வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்பியில் மேக்ரோ கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா என நான்கு பின்புற கேமராக்கள் குவாட்- சென்சார் செட் அப்பில் கெத்து காட்டுகிறது. இதுபோக செல்ஃபிக்குத் தனியாக 8 எம்பியில் ஒரு கேமரா, எடை 198 கிராம், கார்பன் க்ரே, சன்செட் பர்ப்பிள், ஓசோன் க்ரீன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. விலை சுமார் ரூ.12,000-லிருந்து ஆரம்பிக்கிறது.