நெதர்லாந்து பள்ளிகளில் பகவத்கீதை?நெதர்லாந்து நாட்டின் சட்டத்தின்படி டச்சு குழந்தைகளுக்கு பகவத் கீதை வகுப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. அங்கே உள்ள பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை வகுப்புகள் கட்டாயம் என அந்நாட்டின் சட்டம் கூறுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

இரு குழந்தைகள் கையில் பகவத் கீதை புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படத்துடன் இந்த செய்தி பகிரப்படுகிறது. சமீபத்தில் ‘India 360’ என்ற முகநூல் பக்கத்தில் இதே புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். நெதர்லாந்து நாட்டில் இப்படியொரு சட்டம் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் அவ்வாறான செய்திகள் எங்கும் இடம்பெறவில்லை. மேலும், செய்திகளிலும் கூட அது தொடர்பான தகவல் ஏதுமில்லை. நெதர்லாந்து நாட்டில் டச்சு ஹிந்து பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், அந்நாட்டின் சட்டத்தில் பகவத்கீதை கட்டாயம் எனக் கூறுவது தவறான தகவலாகும்.