வைரல் சம்பவம்



சில நேரங்களில் சமூக வலைத்தளங்களில் எதிர்பாராத சம்பவங்கள் கூட வைரலாகிவிடும். அப்படியான சம்பவம் இது. இளைஞர் ஒருவர் பூனைக்கு கரண்டியில் ஐஸ்க்ரீமை ஊட்டுகிறார். பூனையால் ஐஸ்க்ரீமின் குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் சிலிர்க்கிறது.
அந்தப் பூனை இப்போது தான் முதல் முறையாக ஐஸ்கிரீமைச் சுவைக்கிறது. இந்தக் காட்சியை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார் பூனைக்கு ஐஸ்க்ரீமைக் கொடுத்தவர். இந்த வீடியோ வைரலானதோடு ஆயிரக்கணக்கான கமெண்டுகளும் குவிந்துவிட்டன. இதில் நெகட்டிவ் கமெண்டுகளும் அடக்கம்.