வைரல் சம்பவம்கொரோனா வைரஸ் பல வழிகளிலும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. . கொரோனா வைரஸால் முகமூடி, கை கழுவும் சானிடைஸர், டாய்லெட் பேப்பருக்கு உலகம் முழுவதும் பெரிய டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். பெயர், இடம் வெளியிடப்படாத ஒரு பல சரக்குக் கடை.

அங்கே டாய்லெட் பேப்பர் அடுக்கி வைத்திருக்கும் ரேக்குகள் காலியாக இருக்கின்றன. டாய்லெட் பேப்பர் வாங்குவதற்காக அந்தக் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ஏமாற்றத்துடன் ரேக்குகளை வெறித்துப் பார்க்கிறார். இந்தக் காட்சி புகைப்படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலாகிவிட்டது.