கடற்புல்கடலுக்குள் வளர்கின்ற ஒரு தாவரம் கடற்புல். இருண்ட பகுதிகளில் இதனால் வாழ முடியாது. தண்ணீரின் மேற்பரப்பில் சூரிய வெளிச்சம் விழுந்தால்
மட்டுமே இந்த தாவரம் செழுமை யாக இருக்கும். தவிர, கடல் சூழலைக் காப்பதில் கடற்புற்களின் பங்கு முக்கியமானது. சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக கடற்புல் பூமியில்இருந்து வருகிறது.

ஏறக்குறைய 60 வகையான இனங்கள் இதில் இருக்கின்றன. கடந்த பத்தாயிரம் வருடங்களாக மனிதர்கள் கடற்புற்களை உரமாகவும், வீட்டுக்கூரைக்காகவும்,மெத்தை, கார்சீட் தயாரிக்கவும் பயன்படுத்திவருகின்றனர். இதனால் கடற்புல் அழிந்து வருகிறது. சமீபத்தில் மரங்களைவிட கடற்புல் அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடை உள்ளே இழுக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.