கேம்ப் அட்வென்ச்சர் பார்க்இன்று டென்மார்க்கின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டது கேம்ப் அட்வென்ச்சர் பார்க். கோபன்ஹேகனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பூங்கா சாகசப் பிரியர்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. இப்போது புதிதாக 45 மீட்டர் உயரத்தில் சுழன்று செல்லும் படிக்கட்டுகளைக் கொண்ட ஒரு டவரை அமைத்திருக்கின்றனர்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுழன்று சுழன்று செல்லும் இதில் நடப்பதே தனி அனுபவம். அத்துடன் இதன் மீது ஏறி நின்றால் 360 டிகிரி கோணத்தில் சுற்றியிருக்கும் இயற்கையைத் தரிசிக்க முடியும்.  இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு நெருக்கத்தை உருவாக்க இதை அமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் ‘டைம்’ பத்திரிகை, உலகின் சிறந்த 100 இடங் களின் பட்டியலில் இந்த டவருக்கும் ஓர் இடத்தைக் கொடுத்து கௌரவித்துள்ளது.