மெகா டிஸ்பிளே போன்



உலகெங்கும் கொ ரோனா வைர ஸின் தாக்கம் அதிகரித்து பீதியைக் கிளப்பியுள்ளது. அதனால் விமானப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளன. பள்ளி
களுக்கு விடு முறை, ரெட் அலர்ட்,  விளையாட்டுப் போட்டிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூட தள்ளிப்போடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள் ளன. ஆனால், புதிதாக ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வருவது மட்டும் நிற்கவேயில்லை.

ஆம்; கொரோனா வைரஸின் தாக்கத்தையும் தாண்டி கெத் தாக  இந்தோனேஷியாவின் சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘விவோ’வின் வி 19 மாடல். கடந்த டிசம்பரில் இந்தியாவில் வெளியான ‘வி17’ மாடலின் மறுவடிவம் தான் இந்த ‘வி 19’ என்கின்றனர் கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள்.

இந்த மாடலில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஸ்டைலிஷாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். 6.44 இன்ச்சில் ஃபுல் ஹெச்.டி சூப்பர்  AMOLED மெகா டிஸ்பிளே மினி டேப்லெட் போல காட்சியளிக்கிறது.

குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 பிராசஸர், 1080 x 2400 பிக்ஸல் ரெசல்யூசன், 48 எம்பியில் முதன்மை கேமரா, 8 எம்பியில் சூப்பர் வைடு ஏங்கிள் கேமரா, 2 எம்பியில் டெப்த் கேமரா, இன்னொரு 2 எம்பியில் மேக்ரோ சென்சார் கேமரா என நான்கு பின்புற கேமராக்கள், செல்ஃபிக்குத் தனியாக 32 எம்பியில் முன்புறத்தில் ஒரு கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 4500mAh பேட்டரி திறன் என அசத்துகிறது இந்த மாடல். விலை சுமார் ரூ.22,100.