சுற்றுலா தலமாக மாறிய மனித நடமாட்டமே இல்லாத இடம்!அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஷான் ஜுவான் கவுண்டியில் வீற்றிருக்கிறது பிஸ்டி பேட்லேண்ட்ஸ். மனித நடமாட்டமே இல்லாத வனாந்திரப் பகுதி இது. புல் பூண்டு கூட முளைக்காத வறண்டு போன நிலம், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலை, பெரிய பெரிய கல் மலைகளை உள்ளடக்கிய பகுதி என இதன் பயங்கரத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இங்கே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற எந்த சூழலும் இல்லை. கோடிக்கணக்கான வருடங்களாக காற்றும், நீரும் சேர்ந்து நிலத்தையும் கற்களையும் அரித்து  உருவாகியிருக்கிறது.

சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது பிஸ்டி பேட்லேண்ட்ஸ்.  இந்த நிலப்பகுதிக்கு விசிட் அடிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், விசிட் அடித்த ஒவ்வொருவரும் இதை ‘அழகான ஓர் இடம்’ என வர்ணிக்கிறார்கள். யாரும் பேட்லேண்ட்ஸ், பயங்கரமான இடம் என்று சொல்வதில்லை.