தடைஇத்தாலியின் ரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ஸ்பானிஷ் ஸ்டெப்ஸ். பொதுவாக சுற்றுலாப் பயணிகள் அங்கே உள்ள படிக்கட்டிகளில்  உட்கார்ந்து ஓய்வு எடுப்பார்கள். இத்தாலி அரசு ஸ்பானிஷ் ஸ்டெப்ஸை நினைவுச்சின்னமாகக் கருதுவதால் படிக்கட்டுகளில் உட்கார தடை  விதித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதையும் மீறி உட்கார்ந்தால் அபராதம் கட்ட வேண்டும். இது  தெரியாமல் படிக்கட்டில் அமர்ந்த ஒரு சிறுமியை விரட்டியடிக்கிறது இத்தாலிய காவல்துறை.