அதிசய சம்பவம்



ஹவாய் தீவில் உள்ளது கிலோவோ எரிமலை. சுமார் 2,80,000 ஆண்டுகள் பழமையான இந்த எரிமலை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்  மட்டத்திலிருந்து வெளியே வந்தது. சில வாரங்களுக்கு முன்பு எரிமலையின் மேலே ஹெலிகாப்டரில் ஒருவர் பறந்திருக்கிறார்.

அதன் அடியில் உள்ள பள்ளத்தில் பச்சையாக ஒன்று தெரிந்திருக்கிறது. இதை தனது விஞ்ஞானி நண்பரான டான் ஸ்வான்சனிடம்  சொல்லியிருக்கிறார் ஹெலிகாப்டரில் பறந்து வந்தவர். டான் ஸ்வான் ஆராய்ச்சி செய்ததில் அது தண்ணீர் என்று தெரிந்திருக்கிறது. வரலாற்றில்  முதல் முறையாக எரிமலையில் தண்ணீர் இருக்கும் அதிசய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எரிமலை வெடிப்பின் காரணமாக தண்ணீர்  உருவாகியிருக்கலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.