ஹிரோஷிமா தினம்



மனித குல வரலாற்றில் மறக்க முடியாத நாட்கள் ஆகஸ்ட் 6 மற்றும் 9, 1945. அன்றுதான் அமெரிக்கா பலம் வாய்ந்த அணுகுண்டுகளை ஜப்பானின்  ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசியது. அந்தக் குண்டு வெடிப்பில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம்  இன்னொரு முறை நடந்துவிடக்கூடாது மற்றும் அந்த துயரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு வருடமும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த  நாளில் ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டுவரு கிறது. மும்பையைச் சேர்ந்த மாணவர்கள் அமைதியை வலியுறுத்தும்விதமாக ஹிரோஷிமா  தினத்தில் பேரணி நடத்தினர்.