அராஷியாமா



ஜப்பானின் மலைகளின் அரசி அராஷியாமா. இதன் அழகை தரிசிக்க இரண்டு கண்கள் போதாது. மனதை வருடும் மூங்கில் தோட்டங்கள், நேரத்தை  குதூகலமாக செலவிட குரங்கு பூங்கா, அமைதியாக நடைப்பயணம் மேற்கொள்ள ஆற்றுப்பாலம், கண்களைக் குளிர்விக்கும் அழகழகான  மலர்த்தோட்டங்கள் என்று ரம்மியமாக காட்சியளிக்கிறது இந்த இடம். உலகின் அழகான இடங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டிருப்பதோடு  வருடத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விசிட் அடிக்கும் ஓர் இடமாகவும் மிளிர்கிறது அராஷியாமா.