கின்னஸ் சாதனை



அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்று மில்வாக்கி. சில மாதங்களுக்கு முன்பு அங்கே புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு தனியார் மியூசியம்  உலகளவில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக அங்கிருக்கும் தலையாட்டும் உருவ பொம்மைகளை உலகில் வேறு எங்கேயும் நாம் காண முடியாது. ஒரு  கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பில்லும், பிராட்டும் இணை பிரியாத நண்பர்கள். தலையாட்டும் உருவ பொம்மைகள் எங்கு கிடைத்தாலும்  வாங்கிச் சேகரிப்பது அவர்களது வாடிக்கை. ஒரு கட்டத்தில் அவர்களே பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்யத் தொடங்கினர்.

தங்க ளிடம் இருக்கும் அரிய தலையாட்டும் உருவ பொம்மைகளை  ஏன் காட்சிக்கு வைக்கக்கூடாது என்று இருவருக்கும் தோன்றவே, உடனே  வேலையை உதறிவிட்டு ஒரு மியூசியத்தை திறந்துவிட்டனர். அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள்,   சாதனைப் பெண் மணிகள், மன்னர்கள் என 6,500 பேரின் தலையாட்டும்  பொம்மைகள் மியூசியத்தையே ஒரு கலக்கு கலக்குகின்றன. விரைவில் இந்த  பொம்மைகள் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடிக்கப்போகின்றன.