இரட்டை போன்



மெகா சைஸ் டிஸ்பிளேக் களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் களமிறங்கி கபளீகரம் செய்யும் காலம் இது. அந்த வகையில் ‘சாம்சங்’ நிறுவனம்  அதிரடியாக ‘கேலக்ஸி நோட் 10’, ‘கேலக்ஸி நோட் 10 பிளஸ்’ என்ற இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகப் படுத்தவுள்ளது. ஸ்மார்ட்போன்  சந்தையில் கடும்போட்டி நிலவு வதால் பல வகையிலும் ‘சாம்சங்’ தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறது. இதற்காகவே  அனைத்து விதத்திலும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடனும் வசதிகளுடனும் இறங்கியுள்ளது.

மட்டுமல்ல, ஒரே நேரத்தில் இரண்டு ‘நோட்’ மாடல் போன்களை ‘சாம் சங்’ அறிமுகபபடுத்துவது இதுவே முதல் முறை. இந்த இரண்டு மாடல்களும்  புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘Exynos 9825’ என்ற நவீன பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் அசத்துகிறது. தவிர, 12 ஜிபி ரேம்  மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜிலும் கிடைக்கும். டிஸ்பிளேவின் அளவில் மட்டுமே இரண்டுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டை நாம் காண  முடியும். 6.3 இன்ச் மெகா ஸ்கிரீனுடன் ‘நோட் 10’ கெத்து காட்ட, இன்னொரு பக்கம், மினி டேப்லெட் போல 6.8 இன்ச் மெகா டிஸ்பிளேவுடன் ‘நோட்  10 பிளஸ்’ மிளிர்கிறது.  3500 mAh பேட்டரி திறனுடன் ‘நோட் 10’ பிரகாசிக்க, ‘நோட் 10 பிளஸ்’ஸோ 4300 mAh பேட்டரி திறனுடன்  நிமிர்ந்துநிற்கிறது. ‘நோட் 10 பிளஸ்ஸி’ல் மைக்ரோ எஸ்.டி கார்டைப் பொருத்த முடியும். ‘நோட் 10’-இல் இந்த வசதி கிடையாது. அத்துடன் இரண்டு  மாடல்களும் மூன்று பின்புற கேமராக் களுடன் நம்மை ஈர்க் கின்றன. விலை ரூ. 65 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.