வைரல் சம்பவம்இணையத்தில் விநோதமான சம்பவங்கள் அரங்கேறி வைரலாகும் காலம் இது. அப்படி வைரலான அற்புத சம்பவம் இது.  குரங்கு ஒன்று தண்ணீர்  குழாயைத் திறந்து தாகத்தை தணித்திருக்கிறது. தண்ணீர் குடித்து முடித்த வுடன் திறந்த பைப்பை அழகாக மூடியிருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர்  கூட கீழே விழவில்லை. இந்த அதிசய காட்சியை வீடியோவாக்கி டிக்-டாக்கில் தட்டிவிட்டிருக்கின்றனர். இந்த வீடியோவை இந்திய முன்னாள்  தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது டிவிட்டரில் பகிர, வைரலாகிவிட்டது அந்தக் குரங்கின் செயல்.