ராட்சத கிளி



இப்போது நியூசிலாந்து என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் 1.9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிளி வாழ்ந்து வந்தது. இதன் அறிவியல் பெயர்  ‘Heracles inexpectatus’. இந்தக் கிளியின் உயரம் மட்டுமே ஒரு மீட்டர் இருக்கும். அதாவது மனித உயரத்தில் பாதியளவு. டைனோசரைப் போலவே  இந்தக் கிளியும் ஒருவகை கட்டுக்கதை என்று தான் சொல்லிவந்தார்கள்.

டைனோசரின் எலும்புக்கூடுகள் கிடைக்கவே, சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு  டைனோசர் என்ற  உயிரினம் இப்பூமியில் வாழ்ந்திருக்கிறது என்று  நம்பினார்கள். இதே மாதிரி ராட்சத கிளியின் எலும்புக்கூடுகள் சமீபத்தில் கிடைத்திருக் கிறது. நியூசிலாந்தில் முகாமிட்டிருந்த பறவை ஆராய்ச்சியாளர்  களின் கண்ணில் அந்த எலும்புக்கூடு பட்டிருக்கிறது. கால் எலும்பை வைத்து ஆராய்ச்சி செய்ததில் கிளியின் எடை 7 கிலோ இருக்கும் என்று  விஞ்ஞானிகள் சொல்கின்றனர். விரைவில் இந்த ராட்சத கிளியை மையமாக வைத்து ஹாலிவுட்டில் திரைப்படங்கள் வரலாம். அதுவும் ‘ஜுராசிக்  பார்க்’ போல ஹிட்டடிக்கலாம்.