வைரல் சம்பவம்



பிரான்ஸின் புகழ்பெற்ற விமான நிலையம் அது.  சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஜான் தனது குடும்பத்தினருடன் அங்கே வந்தார். ஒரு மணி நேரத்தில் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஜான் கொண்டு வந்திருந்த சூட்கேஸின் எடை ரொம்ப அதிகம். விமான நிலைய விதிப்படி அவ்வளவு எடை கொண்ட சூட்கேஸைக் கொண்டு செல்ல அபராதம் கட்ட வேண்டும்.

ஜானின் கையில் அபராதம் கட்டும் அளவுக்கு பணமில்லை. யோசித்தவர் சூட்கேஸைத் திறந்து அதிலிருந்த பதினைந்து டி-ஷர்ட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக அணிந்துகொண்டார்.  சூட்கேஸின் எடையைக் குறைப்பதற்காக ஜான் செய்த விளையாட்டுத்தனத்தை வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டது.