உலகின் மிக அழகான தீவு



உலகின் தலை சிறந்த பத்து தீவுகளைப் பட்டியலிட்டால் அதில் பலவன் தீவுக்கு நிச்சயம் இடமிருக்கும். பிலிப்பைன்ஸில் வீற்றிருக்கும் இத்தீவை அழகழகான மலைக் குன்றுகள் அலங்கரிக்கின்றன. கடற்கரை, காடு, குகை என்று ஆரம்பம் முதல் இறுதி வரை சொர்க்கம் போல காட்சி தருகிறது இந்தத் தீவு.

2016-ம் வருடம் ‘டிராவலர்’ பத்திரிகையின் வாசகர்கள் பலவனை உலகின் மிக அழகான தீவாகத் தேர்ந்தெடுத்தனர். கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த தீவு பலவன் என்று அடித்துச் சொல்கிறது ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழ். இன்று வருடத்துக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் விசிட் அடிக்கும் இடமாக மிளிர்கிறது பலவன்.