குழந்தைகள் திருவிழா



குழந்தைகள் மண்ணுடன் உறவாடவும், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக உணரவும் சேற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்லேண்டின் பல பகுதிகளில் இத்திருவிழா களைகட்டியது.
குழந்தைகள் தங்களின் உடல் முழுவதும் சேற்றைப் பூசிக்கொண்டும், சேற்றில் குளித்தும், ஜாலியாக சேற்றில் விளையாடி யும் திருவிழாவை அதகளப்படுத்தினார்கள். பன்னிரண்டு வயதைத் தாண்டிய எவருக்கும்  சேற்றுத் திருவிழாவில் பங்கேற்க அனுமதி கிடையாது.