இந்தியர்களுக்கான போன்மிகக் குறைந்த விலையில் அதிக தரத்துடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோடுகின்றது. அதனால் தான் ‘ஆப்பிளி’ ன் ஐபோனைத் தவிர்த்து மற்ற ஸ்மார்ட்போன்கள் பத்தாயிரம் ரூபாய்க்குள்ளாகவே கிடைக்கின்றன. இந்தியச் சந்தையில் ஐபோன்களின் விலை கூட சரியத் தொடங்கியுள்ளது.

விஷயம் இது வல்ல.மலிவு விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி பெரும்பாலான இந்தியர்களின் கை களுக்குள் இன்டர் நெட் தழுவ முக்கிய காரணம் ‘ஷியோமி’ நிறுவனம் என்றால் மிகையில்லை. அதன் ‘ரெட்மி’ பிராண்ட் போனைத்தான் மூன்றில் ஒரு இந்தியர் பயன்படுத்துவதாக ஒரு வணிக ஆய்வு சொல்கிறது. கடந்த வருடமே ஐந்தாயிரத்துக்குள் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை இந்திய வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்போவதாக ‘ஷியோமி’ சொல்லிக்கொண்டே இருந்தது.

அதற்கான நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆம்; ‘ரெட்மி 7 ஏ’ என்ற புதிய ஸ்மார்ட்போனை கடந்த வாரம் அறிமுகப்படுத்தி அமர்க் களப்படுத்தியிருக்கிறது ‘ஷியோமி’. ஐபிஎஸ் எல்.சி.டி மற்றும் ஹெச்.டி ரெசல்யூஷனுடன் கூடிய 5.45 இன்ச் டிஸ்பிளே, 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், 5 எம்பியில் செல்ஃபி கேமரா, 4000mAh திறன் கொண்ட பேட்டரி, 13 எம்பியில் பின்புற கேமரா, ‘Android 9 Pie’ இயங்குதளம் மற்றும் ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி, புளூடூத் என சகல வசதிகளுடனும் அசத்துகிறது இந்த போன். மேட் ப்ளாக், புளூ என இரு வண்ணங்களில் கிடைக்கின்றது. எடை 150 கிராம். விலை ஆறாயிரம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.