திருவிழாக் கூட்டம்இங்கிலாந்தில் கிளாஸ்டன்பரி திருவிழா களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இரவு பகலாக ஒரு வாரத்துக்கு அரங்கேறும். திருவிழாவைக் காண வருகின்ற மக்கள் கிடைத்த இடங்களில் எல்லாம் கூடாரம் அமைத்து தங்கியிருக்கின்றனர். அப்படித் தங்கியிருப்பவர்களை ஏரியல் வியூவில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒரு புகைப்படக் கலைஞர்.