வைரல் சம்பவம்உலகக் கோப்பை கிரிக்கெட் அதன் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டது. கடைசியாக  இந்தியா- பங்களாதேஷ் ஆடிய் மேட்ச்சில் இந்திய வீரர்களின் ஒவ்வொரு சிக்ஸரும் பவுண் டரியும் கவனிக்கப்பட்டதைப் போல, சாருலதா பட்டேல் என்ற தீவிர கிரிக்கெட் ரசிகையையும் கேமரா படம்பிடித்து திரையில் காட்டிக்கொண்டே இருந்தது.

அவர் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இணையவாசிகள் அவரை ‘சூப்பர் ஃபேனாக’ கொண்டாடுகின்றனர். தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா இந்தியா ஆடும் அரை இறுதி ஆட்டத்தை அவர் பார்ப் பதற்காக டிக்கெட் ஸ்பான்சர் செய்திருக்கிறார். இத்தனைக் கும் சாருலதாவின் வயது 87.