கனவு வீடுசீனாவைச் சேர்ந்த ஏழு இணைபிரியாத தோழிகள். இருபது வருடங்களுக்கு முன்பு தோழிகளில் ஒருவர் விளையாட்டாக, ‘‘நாம் ஓய்வு பெற்ற பிறகு ஒரே இடத்தில் வசிக்க வேண்டும். அதற்காக ஒரு வீட்டை வாங்க வேண்டும்..’’ என்று சொல்லி யிருக்கிறார். தோழி விளையாட்டாக சொன்னதை மற்றவர்கள் சீரியசாக எடுத்துக்கொண்டு மாதா மாதம் ஒரு தொகையை சேமிக்க ஆரம்பித்தார்கள்.

கையில் கணிசமாக ஒரு தொகை சேர, தாங்கள் வசிப்பதற்கு ஏற்ற கனவு வீட்டைத் தேடியிருக்கிறார்கள். ஹாங்காங்குக்கு அருகில் அந்த வீடு இருந்திருக்கிறது. ஏழாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மூன்று அடுக்கு மாடி கொண்ட அந்த வீட்டின் மதிப்பு நான்கு கோடி ரூபாய்.  எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த வீட்டை வாங்கிவிட்டார்கள் தோழிகள். அவர்கள் ஓய்வுபெற இன்னும் பத்து ஆண்டுகள் இருக்கின்றன. இந்தியாவில் காபி குடிக்க செய்யும் செலவை விட ஓய்வுக்காலத்துக்காக சேமிப்பது குறைவு.