ட்ரோன் ஹெலிகாப்டர்



விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மிகப்பெரிய அடியை எடுத்து வைக்க தயாராகி விட்டது நாசா. இதற்காக பிரத்யேகமாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ட்ரோன் போன்ற தோற்றத்தில் ஒரு ஹெலிகாப்டரை வடிவமைத்திருக்கிறது. இதற்கு ‘டிராகன்ஃப்ளை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். முதல் முறையாக சனி கிரகத்தின் துணைக்கோள்களை, குறிப்பாக டைட்டன் கோளை ஆராயப்போகிறது இந்த டிராகன்ஃப்ளை.

பிரபஞ்சம் உருவான விதம், வேற்றுகிரகவாசிகள் மற்றும் மனித வாழ்க்கையின் ஆதாரம் ஏதாவது டைட்டனின் மேற் பரப்புகளில் கிடைக்குமா என்றும் தேடப்போகின்றனர். நாசாவில் இருந்து 2026-ம் வருடம் புறப் படும் டிராகன்ஃப்ளை, 2034-இல் டைட்டனை சென்றடையும். ‘‘சூரியக் குடும்பத்தில் முக்கியமான துணைக்கோள் டைட்டன்.

பூமியைப் போலவே அதன் மேற்பரப்பு  இயங்குகிறது. அங்கே மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா? என்பதை ஆராயவே இந்தப் பயணம்...’’ என்கிறது நாசா. இந்தத்  திட்டம் வெற்றிபெற்றால் உலகின் முதன்மையான விண்வெளிப்பயணமாக இது இருக்கும்.