உலகின் மிகப்பெரிய குகை



ஐம்பது மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி கட்டடத்தை உள்ளே ஒளித்து வைக்க முடியும். ஏன், ஒரு தெருவையே  யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கலாம். அந்த அளவுக்கு பெரியது ஹாங் சன் டூங் குகை.
வியட்நாமில் வீற்றிருக்கும் இந்தக் குகையின் உயரம் 200 மீட்டர். நீளம் 9 கிலோ மீட்டர். சுமார் 50 லட்ச ஆண்டுகள் பழமை யானது இந்தக் குகை என்று தொல்லியலாளர்கள் சொல்கின்றனர்.

ஆனால், 1991-ம் ஆண்டு ஹோகான் என்பவர் இந்தக் குகையைக் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்தார். இதற்குள் நுழைய வியட்நாம் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். வருடத்துக்கு 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது. குகையைப் பார்க்க இரண்டு வருடமாக காத்திருப்பவர்கள் கூட உண்டு.