மெகா டிஸ்பிளே போன்



ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டி.வி, மொபைல் ஆப், லேப் டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களைத் தயாரிக்கும் சீன நிறுவனம் ‘ஷியோமி’. 2011-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தனது முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த ஷியோமி, இன்று சீனாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது.

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் இரண்டாவது இடத்தை வெகு குறுகிய காலத்திலேயே ஷியோமி பிடித்துவிட்டது. காரணம், அதன் மலிவான தரமான ஸ்மார்ட்போன்கள். மற்றும் ஏகப்பட்ட மாடல்கள். ஜூலை 2-ம் தேதியன்று ‘Mi CC9’ என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது ஷியோமி. ‘CC’ வரிசையில் வரும் முதல் போன் இதுவே. இளசுகளை மட்டும் மனதில் வைத்து இந்தப் போனை உருவாகியிருக்கிறது ஷியோமி. அதனால் இன்பில்ட்டாகவே நிறைய பொழுதுபோக்கு ஆப்கள் இருக்கின்றன.

டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஜூன் மாத இறுதியில் இந்தப் போனில் என்னென்ன வசதி கள் இருக்கின்றன; போனை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் போன்ற தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு களைக் கிளறிவிட் டது.

நவீன டேப் லெட்டுகளுக்கு சவால்விடும் வகையில் 6.39 இன்ச்சில் மெகா ஹெச்.டி டிஸ்பிளே,  Snapdragon 730 SoC பிராசஸர், சோனி சென்சாருடன் கூடிய 48 எம்பி திறன் கொண்ட கேமரா உட்பட மூன்று பின்புற கேமராக்கள், 32 எம்பியில் செல்ஃபி கேமரா, நீண்ட நேரம் பேட்டரியின் சார்ஜ் நிற்க 4,000mAh திறன், மெலிதான வடிவமைப்பு என அசத்துகிறது இந்த புதிய மாடல் போன். விலை ரூ.16,100.