பாக் தீவு



குரோஷியாவின் முக்கிய தீவு பாக். வடக்கு அட்ரியாட்டிக் கடலின் நடுவே வீற்றிருக்கும் இத்தீவில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கே வளரும் தாவரங்களை உண்டு வாழும் ஆடு களின் பால் அதிக சுவையானவை.
தவிர, அட்ரியாட்டிக் கடலின் உப்பையும் ஆட்டுப் பாலையும் சேர்த்து பாலாடைக்கட்டியைப் போல ஒரு உணவை தயாரிக்கிறார்கள். பாக் தீவில் மட்டுமே கிடைக்கும் இந்த உணவுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் இங்கே வருகை புரிகின்றனர்.