குழந்தைகளைத் தாக்கும் ஆன்டிபயாட்டிக்



உடனடி மருத்துவ நிவாரணத்துக்காக  எடுத்துக்கொள்ளப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் உடலுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படும் என்று தெரிந்திருந்தாலும் கடந்த வருடம் மட்டும் இங்கிலாந்தில் 1.3 கோடிப் பேர் ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களில் மட்டும் சிறுநீரக கல் பிரச் சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 70% அதிகரித்திருக்கிறது. ‘‘இதற்கு  மூலகாரணம் ஆன்டி பயாட்டிக்தான்...’’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது ‘நியூயார்க் டைம்ஸ்’.

தவிர, பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் ஆன்டி பயாட்டிக் அதிகமாகத் தாக்கு கிறதாம். மருத்துவர் ஆலோச னைப்படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தேவைப்படும் போது மட்டுமே எடுத்துக்கொள்வது நலம்.