உலகின் ஆபத்தான சாலை



நார்வேயின் கட்டடக்கலைக்கு மகுடம் வைப்பது போல அமைந்திருக்கிறது அந்த சாலை. அட்லாண்டிக் கடல் சாலை என்று அழைக்கப்படும் இதன் நீளம் 8.2 கிலோ மீட்டர்.  நார்வேஜியன் கடலின் மேல் வளைந்து நெளிந்து மேலும் கீழுமாக செல்லும் எட்டு பாலங்கள் இச்சாலையை இணைக்கின்றன.

உயரப் பறந்து அடிக்கும் அலை மற்றும்  அதிவேகமாக வீசும் காற்றை சமாளிக்கும் திறன் உள்ளவர்களால் மட்டுமே இதில் வாகனங்களை ஓட்ட முடியும். அதனால் உலகின் ஆபத்தான சாலை என இதனைச் சொல்கின்றனர். சாலையைப் பார்வையிடுவதற்காக மட்டுமே

சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர்.