வைரல் சம்பவம்



மனம் சோர்வாக, இறுக்கமாக இருந்தால் உடனே கூகுளுக்குச் சென்று சர்ச் பாரில் ‘Ivanah Campbell’ என்று டைப் செய்யுங்கள். ஆறு வயதான இவானா என்ற சுட்டிப் பெண்ணின்  அற்புதமான நடனக் காட்சிகள் அடங்கிய வீடியோ வரும். ஒவ்வொரு வீடியோவும் நமக்கு உற்சாகத்தை அள்ளித் தருகின்றன.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் நடன அசைவுகளுக்கு ஹாலிவுட் நட்சத் திரங்களான வில் ஸ்மித், கிறிஸ் இவான்ஸ் உட்பட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கப் பாடகர் லிசோவின் பாடலுக்கு ஏற்ற மாதிரி இவானா நடனம் இன்ஸ்டாகிராமில் வெளியாக ஹாட் வைரலாகிவிட்டது. ‘‘இசையின் சத்தம் கேட்டாலே என்னையும் அறியாமல் ஆடிவிடுகிறேன்...’‘ என்கிறார் இவானா.