வைரல் சம்பவம்



கடந்த வார ஹாட் டாக்கே லிடியன் நாதஸ்வரம் பற்றியதுதான். அமெரிக்காவில் நடந்த ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் பங்குபெற்று ஏழு கோடி ரூபாய் பரிசுத் தொகையை வென்றிருக்கிறான் சென்னையைச் சேர்ந்த இச்சிறுவன். உலகளவில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளம், ‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சி.

இதில் தலைசிறந்த திறமைசாலியை பிரசித்தி பெற்ற நடுவர்கள் தேர்ந்தேடுத்து பரிசு கொடுப்பார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களின் கொடியே பறந்து கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவின் பெருமையைத் தலைநிமிரச் செய்திருக்கிறான் லிடியன். போட்டியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை உலகையே ஆச்சர்யப்படுத்திருக்கிறான் இந்தக் குட்டி இசை மேதை.

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட உலகப் பிரபலங்களிடமிருந்து வரும் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறான் லிடியன்.  லிடியனின் தந்தை ஓர் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.