உலகின் அதிவேகமான கார்



தலைப்பைப் படித்ததும் ஃபெராரி, பி.எம்டபிள்யூ, பென்ஸ் காரில் ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் இல்லை. உலகின் அதிவேகமாக செல்லக்கூடிய காரான ‘பட்டிஸ்டா’வை வடிவமைத்திருக்கிறது இத்தாலியைச் சேர்ந்த ‘பினின்ஃபரினா’ நிறுவனம். பார்முலா ஒன் பந்தயக் காரை விட வேகமாகச் செல்கிறது இந்த சூப்பர் கார்.

ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் பார்வைக்காக வைக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது பட்டிஸ்டா. மின்சாரத்தில் இயங்கும் இந்தக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 450 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம்.
மணிக்கு 100 கி.மீ வேகத்தை இரண்டே நொடிகளில் அடையும் திறன் கொண்ட ஒரே கார் பட்டிஸ்டா என்பது இதில் ஹைலைட்.விஷயம் இதுவல்ல.இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா குழுமத்துக்குச் சொந்தமானது ‘பினின்ஃபரினா’ நிறுவனம். இந்நிறுவனத்தை 2015-இல் கையகப்படுத்தியது மஹிந்திரா குழுமம்.