வள்ளல் அஸிம் பிரேம்ஜி



‘‘நான் ஒரு விஷயத்தை ஆழமாக நம்புகிறேன். அதாவது வசதி வாய்ப்பு மிகுந்தவர்கள் தங்களிடமுள்ள கணிசமான வளத் தின் ஒரு பகுதியை, வசதி வாய்ப்பற்ற மில்லியன் கணக் கான மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்போது அல்லது அதற்கான முயற்சிகளை எடுக்கும்போது ஒரு சிறப்பான உலகத்தை நம்மால் உருவாக்கிட முடியும்...’’ என்று ஆணித்தரமாகச் சொல்வதோடு மட்டு மல்லாமல் வாழும் உதாரணமாகவும் திகழ்கிறார் அஸிம் பிரேம்ஜி.  
‘விப்ரோ’ நிறுவனத்தின் சேர்மன், பெரும் பணக்காரர் என்ற அடையாளத்தைத் தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க அவரின் சேவை மனப்பான்மையே முக்கிய காரணம்.

சமீபத்தில் ‘விப்ரோ’ நிறுவனத்தின் பங்குகளில் 34 சதவிகிதப் பங்கை சமூக நலப் பணிகளுக்காக ஒதுக்கியிருக்கிறார். அதன் மதிப்பு 52,750 கோடி ரூபாய். இதற்கு முன் அவர் ஒதுக்கிய தொகையையும் ஒன்று சேர்த்தால் அவர் சமூக நலன்களுக்காக ஒதுக்கியிருக்கும் மொத்த தொகை  1,45,000 கோடி ரூபாய். அதாவது ‘விப்ரோ’ நிறுவனத்தின் 67 சதவிகிதப் பங்கு மதிப்பை சமூக நலனுக்காகவே கொடுத்திருக்கிறார் அஸிம் பிரேம்ஜி.

உலகளவில் தான் ஈட்டிய வருமானத்தில் பெரும் தொகையை சமூக நலனுக்காகக் கொடுத்த கொடையாளிகளில் டாப் 10 வரிசைக்குள் வந்துவிட்டார் அஸிம் பிரேம்ஜி. முதல் இடத்தில் ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார். அவரின் ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாயை சமூக நலனுக்காக ஒதுக்கியுள்ளது.
அஸிம் பிரேம்ஜிக்கு ஒரு சல்யூட்.