அவிட்டல் ஷவித், ரூபினா கஸரியான்



தலைவன் இவன் ஒருவன்  35

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பிற முக்கிய நகரங்களைப் போலவே கடுமையாக மாசுபாடடைந்து வரும் நகரம். எண்பத்தெட்டு முனிசிபாலிட்டிகளைக் கொண்டுள்ள நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2011 ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகிறார்கள் அவிட்டல் ஷவித் மற்றும் அவரது தோழியான ரூபினா கஸரியான் ஆகியோர். “மக்கள் ஒவ்வொருவருக்குமான போக்குவரத்து வாகனங்களை உருவாக்குவது எப்படி  என்று முதலில் யோசித்தோம்” என்கிறார் ரூபினா கஸரியான்.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல் படுத்தினார்கள். பொதுப்போக்குவரத்து இடங்களில் சைக்கிள்களை நிறுத்திவைத்து மக்களை பயன்படுத்த ஊக்கப் படுத்துவதே பிளான். மக்களின் வரவேற்பால் 3 லட்சம் பவுண்டுகள்(1,36,077 கி.கி) கார்பன் மாசை குறைத்துள்ளது தோழிகள் இருவரின் பசுமை சாதனை.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி உள்ளிட்ட முனிசிபாலிட்டிகளும் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டி செயல்படுத்த ஆலோசனைகள் கேட்டு வருகின்றன.சைக்கிள் பயணத்தை ஆதரித்து  விழிப்புணர்வு எற்படுத்தும் LACBC, MCM உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து  பெண்கள் மேம்பாட்டுக்கான பயணம் செய்வது இவர்களின் முக்கிய செயல்பாடு.
  
நிக்கி சீட்ஸ்

அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த நிக்கி சீட்ஸ், ஹார்வர்டு பல்கலையில் சட்டம் கற்றவர். உயிரிவேதியியலில் முனைவர் பட்டம் வென்றவர், பின்னாளில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கத்தொடங்கினார். காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து போராடி சட்டங்களின் மூலம்  பாதிப்புகளுக்கு தீர்வு கண்டார்.

எ.கா. நெவார்க் பகுதியில் மாசுபாடு சட்டம் 2016. “மக்கள் தமக்குள்ளே ஒற்றுமை காணாதபோது, சூழல் பிரச்னைகளுக்கு எதிராக ஒன்று திரள்வது எப்படி சாத்தியமாகும்?” என பொட்டில் அடித்தாற்போல பேசுகிறார் நிக்கி.

2014 ஆம் ஆண்டு நெவார்க் மின்சார நிலையம் அமைக்கும்போது, விதிகள் மீறப்பட்டதாக புகார் வந்தவுடன் நிக்கி பரபரவென பேனாவும் பேப்பருமாக வேலையில் இறங்கினார். வேறு வழியின்றி நிக்கியின் கோரிக்கைகளையும் விதிகளையும் இணைத்து மின்சாரநிலையம் கட்டப்பட்டது இவரின் முக்கியமான சாதனை.

பகதூர் ராம்ஸி