கண்நோய்க்கு அல்காரிதம்!



கூகுள் ஆராய்ச்சியாளர்கள் கண்களை ஆய்வு செய்து அதன் மூலம் இதய நோய்களைக் கண்டுபிடிக்கும் அல்காரிதத்தை கண்டு பிடித்துள்ளனர். ஒருவரின் வயது, ரத்த அழுத்தம், புகைபிடிப் பவரா இல்லையா ஆகிய விவரங்களை அறிவதன் மூலம் மாரடைப்பு ஏற்படும்  விகிதத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

கூகுளின் புதிய அல்காரிதம் மூலம் ரத்த டெஸ்ட் எடுக்காமல், கண்களை செக் செய்தாலே போதும். கூகுள் மற்றும் கூகுளின்  வெரிலி  எனும்  மானிய உதவித் திட்ட ஆராய்ச்சியாளர்கள்  இணைந்து 3 லட்சம் நோயாளிகளிடம் அல்காரிதத்தை சோதித்துள்ளனர். உடலின் ரத்தஓட்டத்தை கண்கள் பிரதி பலிப்பதால் அதன் மூலமே நோய்களை அறியமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.