கரப்பான்பூச்சியின் சக்தி!



அகில உலக கேரக்டராக சந்து பொந்து எங்கும் வாழும் உயிரியான கரப்பான்பூச்சி, மனிதர்களையும்  இயற்கையையும் சமாளித்து இன்றும் அழியாமல் வாழ்ந்து வருகிறது. 3 கோடி  ஆண்டுகளாக வாழும் உயிரி, அணு ஆயுதப்போரிலும் பிழைக்கும் என்பது உண்மையா?

கதிர்வீச்சை  தாங்குவதில்  மனிதர்களை விட வலிமையானது   கரப்பான். ஒரு மாதத்திற்கும்  மேல்  சாப்பிடாமல்  தாக்குப் பிடிக்கும் இதன் திறன், அணு ஆயுதப்போரில் உதவும் என கணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பரிணாம  வளர்ச்சியின் வேகமும், விஷத்தையும் கதிர்வீச்சையும் எதிர்த்துத்  தாங்கும் வலிமையும் கரப்பானுக்கு கவசமாக உதவலாம்.

வண்டுகள், கரப்பான்பூச்சிகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் செய்த டெஸ்ட்டில் மனிதர்களைக் கொல்லுமளவு  பத்து  மடங்கு  கதிர்வீச்சு பயன் படுத்தியபோது, வண்டுகள் கரப்பான்பூச்சியையும் தாண்டி தாக்குப்பிடித்து சாதித்தன. 4  ஆயிரம்   வகை கரப்பான்பூச்சிகள்  கோடிக்கணக்கில்  உயிர்வாழ் வதால், அவற்றில் சில நியூக்ளியர் போரில் பிழைக்க வாய்ப்புண்டு. எனவே கரப்பான்பூச்சிகள்மட்டுமல்ல, வேறு உயிரிகளும் கதிர்வீச்சைத் தாங்குகின்றன என்பது உறுதியாகியுள்ளது.