தகவல்களுக்கு பாதுகாப்பு?



ஸ்மார்ட்போன்களில் இணையம் செல்பவர்கள், தன் அடையாளத்தை மறைத்தாலும் தகவல்களைக் காப்பாற்றுவது மிகச் சிரமம். 2015 ஆம் ஆண்டு சான் பெர்னார்டினோவில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக எஃப்பிஐக்கும் ஆப்பிளுக்கும் நடந்த சண்டை அனைவருக்கும் தெரியும்.  தீவிரவாதிகளின் ஐபோனில் தகவல்களைப் பெற ஆப்பிளின் உதவியைக் கேட்டது அரசு. ஆப்பிள் மறுக்க, அரசு,  டீகிரிப்ட்  செய்து உடைத்து  திறந்தது  மக்களுக்கு  மட்டுமல்ல,   ஆப்பிளுக்குமே  பேரதிர்ச்சி.

2015 ஆம் ஆண்டு  ஜூலையில்  அமெரிக்காவில் 21 கோடி மக்களின் சமூகநல எண்கள் திருடப்பட்டன, டிச. 2015 ஆம் ஆண்டில் உக்ரைன் மின்சார  நிறுவனத்தின் மீதான இணையதாக்குதல், ஹிலாரி கிளிண்டனின் இமெயில்  கணக்கு  திருட்டு  ஆகியவை இணையதாக்குதல்கள் எப்படி ஸ்கெட்ச் போட்டு துல்லியமாக நடக்கின்றன என்பதற்கு சாம்பிள்.

தீர்வு, கூகுளின் Authy போன்ற வசதிகள்.சேவைகளை பயன் படுத்தும்போது பயனர் பெயர், பாஸ்வேர்ட் கிடைக்கும். பயன் படுத்திவிட்டு லாக் அவுட் செய்தால் போதும். 30 நொடிகளுக்கு ஒருமுறை பாஸ்வேர்ட் மாறும். மிச்சிகனைச் சேர்ந்த duo பாதுகாப்பு வசதி, பாஸ்வேர்ட், பெயரை டைப் செய்வதோடு போனில் உள்ள ஆப்பை இயக்கி வெரிஃபை செய்தால் மட்டுமே சேவைகள் இயங்கும். எனவே இதுபோல் பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தி பிரைவசி காக்கலாம்.